லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
கோவையில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.;
கோவை
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவில் மோட்டார் சைக்கிளில் கோவை-சத்தி ரேட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக பின்னால் வந்த லாரி ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.