110 லிட்டர் சாராயம் பதுக்கிய வார்டு உறுப்பினர் கைது

கெங்கவல்லியில் 110 லிட்டர் சாராயம் பதுக்கிய வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-04-11 01:38 IST
கெங்கவல்லி:-
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ஆணையம்பட்டி வடக்கு வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி  9-வது வார்டு உறுப்பினர் முத்துராஜா (வயது 42) என்பவரின் விவசாய தோட்டத்தில் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக முத்துராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்