பூத வாகனத்தில் சாமி வீதி உலா
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவில் பூத வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவில் பூத வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிறவி மருந்தீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
சாமி வீதி உலா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வர்த்தகர்களின் பூதவாகனம் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து பூத வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எஸ். செந்தில்குமார், மற்றும் ஆலய செயல் அலுவலர் ராஜா,
கணக்கர் சீனிவாசன், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விழாவையொட்டி தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.