வீடு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு வீடு வழங்கக்கோரி வழங்க வேண்டும் என வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் சிறுத்தை செந்தில் தலைமை தாங்கினார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் வேங்கை தமிழன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் குமார், ஈழன் ரமணி, நந்தன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு அரசு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்து நான்கு எல்லை அளக்க பணம் கட்டிய பிறகும் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வரும் வருவாய் துறையினரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.