நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 165 மனுக்கள் பெறப்பட்டன.;
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வங்கிக் கடன், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 165 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து நாகை வட்டம் கொட்டாரக்குடியைச் சேர்ந்த 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 2 பேருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, கீழ்வேளுர் வட்டம் வடக்காலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்பவரின் மகளின் மருத்துவ செலவிற்காக மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் துணை கலெக்டர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்