மது,கஞ்சா விற்ற 19 பேர் கைது

கோவை மாவட்டத்தில் மது,கஞ்சாவிற்றஒரே நாளில் 19 பேர் கைது செய்யப்பட்டு, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-04-11 22:55 IST
கோவை

கோவை மாவட்டத்தில் மது,கஞ்சாவிற்றஒரே நாளில் 19 பேர் கைது செய்யப்பட்டு, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இதன்படி மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் அங்குள்ள சுற்றுலா மையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இது தொடர்பாக கஞ்சா கடத்தி வந்த ஆட்டோ டிரைவர் முகமது உவாய்ஸ் (வயது 31) கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

வட மாநில வாலிபர்

சூலூர் தென்னம்பாளையம் பாலத்துக்கு அடியில் கஞ்சா விற்றதாக ஒடிசாவைச் சேர்ந்த சங்கர் டிகால் (18) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதாக சுக்ரவார்பேட்டையை சேர்ந்த காளிதாஸ் (22), சாய்பாபா காலனியை சேர்ந்த சுரேந்திரன் (26), ரத்தினபுரியை சேர்ந்த கவுதம் (27), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அந்தோனி குணசேகரன் (29), ராமநாதபுரத்தை சேர்ந்த மதன்குமார் (24), பாபு (25), கண்ணன் (27), பனைமரத்தூர் சில்வர் திருஞானம் (51) மணிகண்டன் (32), குனியமுத்தூர் ரியாசுதீன் (33), பாலக்காடு அபிஸ் (27), சரவணம்பட்டி முனீஸ்வரன் (23) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

11 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் கஞ்சா விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டர், ஒரு ஆட்டோ, 4 செல்போன், 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மது விற்ற 6 பேர் கைது

கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வெள்ளலூர், ஆர்.எஸ்.புரம், வெங்கிட்டாபுரம், காந்திபுரம், பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். 

அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகிலும், பெட்டிக் கடைகளிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வெள்ளலூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 42), திருச்சியை சேர்ந்த பெரியசாமி (41), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (34),

 செல்வபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (19), கும்பகோணத்தை சேர்ந்த பாரதிராஜா (41), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வரதராஜன் (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்