ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பறவைக்காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2022-04-11 23:46 IST
ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 3-ந்் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆதனக்கோட்டை, மடத்துக்கடை, பழைய ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க கரும்பால் தொட்டி கட்டியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும்  ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை ெசலுத்தினர். இதையடுத்து இரவு அம்மன் யாளி வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்