வால்பாறையில் ஓடும் பஸ்சில் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
வால்பாறையில் ஓடும் பஸ்சில் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
வால்பாறை
வால்பாறையில் இருந்து முருகன் எஸ்டேட் பகுதிக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் வால்பாறை சோலையாறு அணை சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அந்த பஸ் ஸ்டேன்மோர் எஸ்டேட் அருகில் உள்ள மாதா சந்திப்பு பகுதி அருகே சென்றபோது திடீரென முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணாடி உடைந்ததும் உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அந்த நேரத்தில் லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது. இருந்தபோதிலும் பயணிகள் பஸ்சைவிட்டு இறங்கி மழையில் நனைந்தபடி நின்றனர்.
அப்போது இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதிக்கு செல்ல வந்த அரசு பஸ்சில் பயணிகள் மாற்றி விடப் பட்டனர். திடீரென அரசு பஸ்சில் கண்ணாடி உடைந்தது எப்படி என்பது தெரியவில்லை.
எனவே அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.