குளத்தில் மூழ்கி பூ வியாபாரி சாவு
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பூ வியாபாரி உயிரிழந்தார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே கூரம் பகுதியில் வசித்து வந்தவர் பிரபு (வயது 38). இவர் காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலை கூரம் பகுதியில் உள்ள குளத்தில் கால்கழுவ சென்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி தவறி குளத்தில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரபு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த பாலுசெட்டி போலீசார் பிரபுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.