சாலை விபத்தில் தொழிலாளி பலி
மாடம்பாக்கம் மேம்பாலத்தில் டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41), டிராக்டர் டிரைவர். கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (35). சுமைத்தூக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று டிராக்டரில் கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனர்.
மாடம்பாக்கம் மேம்பாலத்தில் டிராக்டர் செல்லும் போது திடீரென டிரைவர் பிரேக் போட்டதால் டிராக்டர் மேம்பால தடுப்பு கட்டை மீது மோதி ஒரு பக்கமாக ஏறி நின்றது. இதில் சரவணன் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.