கஞ்சா விற்ற வாலிபர் கைது

வில்லியம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-12 14:29 IST
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் அடுத்த ஆத்தூர் தென்பாதி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் கஞ்சா விற்ற பிரேம்குமார் என்கிற கருப்பன் (வயது 28) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2¾ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்