பாரதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்குள் பெண்கள் உடை அணிந்து மீண்டும் மர்ம நபர் நடமாடியதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்

பாரதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்குள் பெண்கள் உடை அணிந்து மீண்டும் மர்ம நபர் நடமாடியதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்;

Update:2022-04-12 19:18 IST

வடவள்ளி

பாரதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதிக்குள் பெண்கள் உடை அணிந்து மீண்டும் மர்ம நபர் நடமாடியதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மகளிர் விடுதி

கோவை மருதமலை ரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த பெண்கள் விடுதியில் இரவு மர்மநபர்கள் புகுந்ததாக கூறி கடந்த மாதம் 31-ந் தேதி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். 

அங்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகள் அதிர்ச்சி

 அதன்படி, மாணவிகள் விடுதியை சுற்றி 6 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டன. போலீசாரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மகளிர் விடுதிக்குள் மீண்டும் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். 

அவர் தனது உடைகளை அகற்றி விட்டு, அங்கிருந்த மாணவிகளின் உடைகளை அணிந்து கொண்டு விடுதிக்குள் சுற்றித்திரிந்தார். 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சல் போட்டனர். உடனே அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கல்லூரி நிர்வாகத்தினர்  வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்