கோவை அருகே ஆம்புலன்ஸ் வேன் கவிழ்ந்து பச்சிளம் குழந்தை மற்றும் டிரைவர் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்

கோவை அருகே ஆம்புலன்ஸ் வேன் கவிழ்ந்து பச்சிளம் குழந்தை மற்றும் டிரைவர் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்;

Update:2022-04-12 19:27 IST

போத்தனூர்

கோவை அருகே ஆம்புலன்ஸ் வேன் கவிழ்ந்து பச்சிளம் குழந்தை மற்றும் டிரைவர் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பச்சிளம் குழந்தை

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 26). இவருடைய மனைவி ரம்யா. இவருக்கு நேற்று காலை உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

ஆனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். 

உடனே தனியார் ஆம்புலன்ஸ் வேனில் குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்கள் பழனிச்சாமி, சகுந்தலா, வள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை நர்ஸ் ஆகியோர் பொள்ளாச்சி வழியாக கோவை வந்து கொண்டு இருந்தனர். 

2 பேர் சாவு

அப்போது ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டினார். மலுமிச்சம்பட்டி அருகே வந்த போது ஆம்புலன்ஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி, வள்ளி ஆகியோர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் தலையில் காயமடைந்த சகுந்தலா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து சாலையில் கிடந்த ஆம்புலன்ஸ் வேன் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்