அதிக ஒலி எழுப்பியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்து பொதுமக்களை டிரைவர், கண்டக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கூடும் இடங்களில் அதிக ஒலி எழுப்பியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்து பொதுமக்களை டிரைவர், கண்டக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;
கோவை
கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் தனியார் டவுன் பஸ் அதிக ஒலி (ஹாரன்) எழுப்பி கொண்டிருந்தது.
இதை அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்து தட்டிக் கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவரும், கண்டக்டரும், பஸ்சை விட்டு இறங்கி வந்து பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து பொதுமக்களை சரமாரியாக தாக்கினர்.
இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மக்கள் கூடும் இடங்களில் அதிக ஒலி எழுப்பியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்து பொதுமக்களை டிரைவர், கண்டக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.