கோவை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கணபதியில் நடைபெற்றது

கோவை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கணபதியில் நடைபெற்றது;

Update:2022-04-12 19:35 IST

கோவை

கோவை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கணபதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

அவர்களுக்கு ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு, வேல்கம்பு, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில் மாணவர்கள் ஆத்விக் வேதாந்த், அகில் ஆர்யாவ், கிரிஷாந்த், அஸ்வின் சாய், வருண், ஸ்ரீஹரி, ஸ்ரீ ஆகாஷ், ஆதர்ஸ், ஆரவ், சக்தி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்றனர். 

போட்டியில் நேஷனல் சிலம்பம் அகாடமி மாணவர்கள் மட்டும் 59 பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர்கள் நந்தகுமார், நிதிஷ்குமார், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்