மாற்றுத்திறனாளி களுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை கலெக்டர் சமீரன் வழங்கினார்

மாற்றுத்திறனாளி களுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை கலெக்டர் சமீரன் வழங்கினார்;

Update:2022-04-12 21:09 IST

கோவை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், 3 சக்கர சைக்கிள், மோட்டார் பொருந்திய தையல் எந்திரம், 

தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை, வங்கி கடன் மானியம், இலவச பஸ் பாஸ், காதொலிக் கருவி மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.


இதன் ஒரு பகுதியாக முதுகுதண்டு வடம் பாதித்த 18 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.99 ஆயிரத்து 777 வீதம் மொத்தம் ரூ.17.95 லட்சம் மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்,

 செவித்திறன் குறைபாடு உடைய 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 999 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி களுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை வழங்கி னார். 

மேலும் செய்திகள்