பீன்ஸ் விதையை விழுங்கிய 3 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி
பீன்ஸ் விதையை விழுங்கிய 3 வயது சிறுமி மூச்சுத்திணறி பலியானாள்.;
நாக்பூர்,
நாக்பூர் சுக்காலி பெல்தார் கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். சிறுமியின் தாய் இரவு உணவிற்காக சமைக்கப்பட்ட பீன்ஸ் விதைகளை மற்றவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தார். தரையில் சமைக்கப்படாத பீன்ஸ் விதை ஒன்று கிடந்ததை கண்ட சிறுமி வாயில் வைத்து விழுங்கினாள். இதனால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட பெற்றோர் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி உயிரிழந்தாள்.
இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.