திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

ஊரப்பாக்கம் ஆதனூர் சாலை அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-13 14:35 IST
வண்டலூர்,  

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஆதனூர் சாலை அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகில், திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு மண்ணிவாக்கம் மேட்டு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 34), என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, மறைமலைநகரில் நேற்று முன்தினம் சிங்காரவேலர் தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே, திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஹரிகரன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை கைப்பற்றினர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்