சுல்தான்பேட்டை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் டிரைவர் கைது

சுல்தான்பேட்டை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் டிரைவர் கைது;

Update:2022-04-13 18:04 IST


சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ராஜேஷ் (22). டிரைவர். இந்த நிலையில் ராஜேஷ் எப்போதும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச்செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனை பார்த்த சரஸ்வதி அவரைக் கண்டித்து, அறிவுரை கூறினார். ஆனாலும், அவர் மோட்டார் சைக்கிளை அதி வேகமாகவே தொடர்ந்து இயக்கி வந்ததாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த சரஸ்வதி மீண்டும் ராஜேசை கண்டித்ததுடன் அது குறித்து அவரது பெற்றோரிடம் புகார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் குடிபோதையில், சரஸ்வதி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சரஸ்வதி சுல்தானபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்