இன்று மகாவீ்ர் ஜெயந்தி செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் உரிம நிறுவனங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்றைய தினம் கடைகள் மதுபான கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ, உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.