விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சாவு

விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சாவு;

Update:2022-04-14 20:51 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கரியாஞ்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் அபிநந்தினி (வயது 21). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆத்திரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்