ஜாமீனில் வெளியே வந்த கொலை வழக்கு கைதி தற்கொலை

ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த கொலை வழக்கு கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update:2022-04-14 23:27 IST
கோவை

ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த கொலை வழக்கு கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

ஜாமீனில் வந்தார்

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி கண்ணபிரான் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அந்தோணி (வயது 39). ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவர் தனது தந்தை ராமசாமியுடன் இருந்து வந்தார். 

தற்கொலை

இந்த நிலையில் ஆரோக்கிய அந்தோணிக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவரது மனைவி 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சிறையில் இருந்து வந்த ஆரோக்கிய அந்தோணி தனது மனைவியை நினைத்து மனவேதனை அடைந்து வந்தார். 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்