தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-04-15 14:59 IST
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் என்.எச்.2, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று முன்தினம் மகாராஜன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை இவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டு கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்