பொள்ளாச்சி அருகே மது பாராக மாறிய ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை மது அருந்தும் இடமாக மாறிவருகிறது.;

Update:2022-04-15 19:53 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை மது அருந்தும் இடமாக மாறிவருகிறது.

அணைக்குள் அத்துமீறல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையில் அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்க்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது போதிய மழை பொழிவு இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அணைக்குள் அத்துமீறி இறங்கி குளிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆழியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தாலி யாருக்கு ஆழியாறு வரும் சுற்றுலாப்பயணிகள் அணைக்குள் இறங்கி அத்து மீறி செயல்படுகின்றனர் குழந்தைகளுடன் தண்ணீரில் இறங்கி குளிக்கின்றனர் மேலும் சிலர் கும்பலாகச் சென்று அணைக்குள் மது அருந்துகின்றனர். சிலர் போதையில் பாட்டில்களை உடைக்கின்றனர். இதனால் அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளின் கால்களை பாட்டில்கள் பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் அணைக்குள் முதலை நடமாட்டம் உள்ளது. இதை அறியாத சுற்றுலா பயணிகள் அணைக்குள் சென்று செல்பி புகைப்படம் எடுக்கின்றனர். இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அணைக்குள் மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால் தண்ணீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைக்குள் அத்துமீறி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்