புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி வால்பாறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.;

Update:2022-04-15 19:54 IST
வால்பாறை

புனித வெள்ளியையொட்டி வால்பாறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

சிறப்பு பிரார்த்தனை 

வால்பாறை பகுதியில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் சார்பில் ஏசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விட்ட புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டபோது பேசிய ஏழு வார்த்தை வழிபாட்டை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வார்த்தையையும் விளக்கி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ஆயர் சுந்தர்சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வால்பாறை பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களான தூய இருதய தேவாலயம், முடீஸ் புனித அந்தோணியார் ஆலயம், சோலையாறு அணை புனித சூசையப்பர் தேவாலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெற்றது. 

சிலுவை பாதை வழிபாடு

அதனை தொடர்ந்து  ஆலயத்தில் சிறப்பு சிலுவை பாதை வழிபாடு மற்றும் திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடைபெற்றது. அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் தேவாலயத்தில் ஆராதனை வழிபாட்டுடன் சிறப்பாக சிலுவை மலையில் சிலுவை பாதை வழிபாடு 14 இடங்களில் நடைபெற்றது. இந்த சிலுவை பாதை வழிபாட்டின் போது பக்தர்கள் தோளில் சிலுவையை சுமந்து கொண்டு புனித வனத்து சின்னப்பர் ஆலய சிலை மலையில் ஊர்வலமாக சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக 16-ந்தேதி  சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஒளி வழிபாடு மற்றும் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் நள்ளிரவு கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்