சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா

சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா நடந்தது.;

Update:2022-04-15 19:55 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் ஆதி அமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந்தேதி சித்தர் பூஜையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதி பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.  திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஆதிசங்கரர், ஆதி அமரநாயகியுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்