கோவையில் விஷூ பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டனர்.;

Update:2022-04-15 23:17 IST
கோவை

கோவையில் விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டனர்.

விஷூ பண்டிகை 

கேரள மக்களின் புத்தாண்டான விஷூ பண்டிகை கொண்டாட்டம்  நடைபெற்றது. இதையொட்டி கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
 
கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் கேரள புத்தாண்டை முன்னிட்டு மா, பலா, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. 

அத்துடன் . மேலும் கோவில் நடை அதிகாலை 4 மணி முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

சாமி தரிசனம்

மேலும் கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கை நீட்டம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோவையில் உள்ள கேரள மக்கள் தங்களது வீடுகளில் பல்வேறு வகையான பழங்களை வைத்து கனி காணும் நிகழ்ச்சி நடத்தினர். இதனைத்தொடர்ந்து பெரியவர்களிடம் கை நீட்டம் என்று அழைக்கப்படும் ஆசி பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் வழங்கிய பணத்தையும் பெற்றுக்கொண்டனர். 

மேலும் பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட்டனர். இதேபோல் எட்டிமடை, மதுக்கரை, ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரள மக்கள் தங்களது புத்தாண்டை கொண்டாடினர்.

மேலும் செய்திகள்