வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி சாவு

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.;

Update:2022-04-15 23:45 IST
பேரூர்

தஞ்சாவூர் மாவட்டம், நடராஜபுரம் அருகே 2-வது வீதியைச் சேர்ந்தவர் கரிகாலன் (வயது 48) ஒட்டல் தொழிலாளி. இவர்  தனது ஊரைச் சேர்ந்த நண்பர் ராஜசேகர் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கி ஆண்டவர் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார். 

சம்பவத்தன்று காலை  இருவரும்  பூண்டி அடிவாரத்தில் இருந்து வெள்ளிங்கிரி மலை ஏறியுள்ளனர். 2-வது மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது மதியம் 12 மணிக்கு மலையேற முடியாமல் கரிகாலன் மூச்சுத்திணறி மயங்கி கீழேவிழுந்துள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர்  விரைந்து சென்று  ஆம்புலன்ஸ் மூலமாக  கரிகாலனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்