அன்னூர் நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

அன்னூர் நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-04-15 23:45 IST
அன்னூர்

கோவை அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். நிதிநிறுவன அதிபர். இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.

 இதுதொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த குட்டி என்ற ராஜேந்திரன், ஆட்டோ டிரைவர் பகவான் என்ற தமிழ்செல்வன், ரங்கநாதன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் ராஜேந்திரன், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

 இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை கோவை சிறையில் உள்ள ரங்கநாதனிடம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்