தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்று உள்ளதாக இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்று உள்ளதாக இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.;

Update:2022-04-16 22:19 IST
கோவை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்று உள்ளதாக இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

இலவச மின் இணைப்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 1 ஆண்டில் 1 லட்சம் விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் உரையாடல் நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி, கற்பகம் உயர்கல்வி நிறுவனம், சரவணம்பட்டி, பொள்ளாச்சி உள்பட 11 இடங்களில் நடந்தது.

 இதில் சரவணம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா உள்பட விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் 5,604 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கூறியதாவது:-

முன்னேற்ற பாதை

நஞ்சப்பன், போத்தனூர் செட்டிப்பாளையம் :-
நான் 8 ஏக்கர் நிலம் வைத்து உள்ளேன். அதில் வாழை, தக்காளி, மிளகாய், தென்னை விவசாயம் செய்து வருகிறேன். நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும் இலவச மின் இணைப்பு கிடைக்கவில்லை. 

இதனால் டீசல் மோட்டாரை இயக்கி விவசாயம் செய்து வந்தேன். டீசல் விலையேற்றத்தால் விவசாயத்தில் போதிய வருவாய் இன்றி முடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே எங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி உள்ளார். இதன் மூலம் முடங்கி கிடந்த விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்று உள்ளார்.

நந்தகுமார், ஒத்தக்கால்மண்டம்:-
நான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின் இணைப்பு கேட்டு மனு அளித்து இருந்தேன். ஆனால் பல ஆண்டுகளாக எனது மனு கிடப்பில் கிடந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் எனக்கு இலவச மின் இணைப்பு கிடைத்து உள்ளது. இது ஒட்டுமொத்த விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சி ஆகும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்படும்.

ராமசாமி, போத்தனூர்:-
இலவச மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 11 ஆண்டுகளாக விவாசயம் செய்ய மிகவும் சிரமப்பட்டேன். தற்போது இலவச மின் இணைப்பு கிடைத்து உள்ளது மகிழ்சியளிக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்து தமிழக அரசு சாதித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்