கோவையில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செம்பு, பித்தளை திருட்டு
கோவையில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செம்பு, பித்தளை திருட்டு போனது.;
கோவை
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜ் (வயது 63). இவர் அதேபகுதியில் மெட்டல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான செம்பு, பித்தளை உள்ளிட்ட மெட்டல் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இதில், கடையில் திருடியது கணபதியை சேர்ந்த வெல்டர் சுல்தான் (37) உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வெல்டர் சுல்தானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.