காரமடையில் கடையின் பூட்டை உடைத்து நாய்குட்டிகள், பணத்தை திருடிய 2 பேர் கைது
காரமடையில் கடையின் பூட்டை உடைத்து நாய்குட்டிகள், பணத்தை திருடிய 2 பேர் கைது;
காரமடை
மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர் காரமடை தெப்பக்குளம் எதிர்புறத்தில் பெட்ஷாப் என்ற பெயரில் வண்ணமீன்கள், நாய்கள், பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 3 விலை உயர்ந்த நாய் குட்டிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடையின் பூட்டை உடைத்து திருடியதும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (24), அவரது உறவினரான கேரளா மாநிலம், பாலக்காடு கல்மண்டபத்தை சேர்ந்த சதீஸ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.