6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-04-16 22:20 IST
அன்னூர்

கோவை அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரசுதன் (வயது 28) இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுமியை வீட்டிற்கு விளையாட அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் ஹரிஹரசுதன் சிறுமிக்கு பாலியல் ெதால்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியை தாக்கியதாகவும் தெரிகிறது.
சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு, ஹரிஹரசுதனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிஹரசுதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஹரிஹரசுதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்