சேத்துமடை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

சேத்துமடை வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.;

Update:2022-04-16 22:29 IST
பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை கிழக்கு பிரிவு மங்கரை பகுதியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு யானை கீழே விழுந்து கிடந்தது. 

இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்த்த போது பெண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர், துணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மேலும்  இறந்த காட்டு யானையின் உடலை வனக்கால்நடை டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்