மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நாராயணபுரம் 13-வது தெருவை சேர்ந்தவர் கேசவன்(வயது 40). இவர் சரியான முறையில் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கேசவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.