பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

பொள்ளாச்சியில் தீயணைப்பு துறை சார்பில் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நடந்தது;

Update:2022-04-17 19:43 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் தீயணைப்பு துறை சார்பில் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நடந்தது

தீ தடுப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தீயணைப்புதுறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும்  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் ஆர்.பொன்னாபுரத்தில் இயங்கி வரும் தனியார் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை தீ பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் பொது மேலாளர், மேலாளர் மற்றும்அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

செயல் விளக்கம்

இந்த பாதுகாப்பு பயிற்சியை பொள்ளாச்சி தீயணைப்புநிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் 10 வீரர்கள் கலந்து கொண்டு செய்து காண்பித்தனர். குடிசைப் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சிகள் செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டு வருகிறது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 
முன்னதாக தீப்பற்றியவர்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டிய முதல் உதவிகள், பின்னர், மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என தொழிலாளர்கள் மத்தியில் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்