தாடகை மலை அடிவாரத்தில் சமுக்தியாம்பிகையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தாடகை மலை அடிவாரத்தில் சமுக்தியாம்பிகையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரத்தில் உள்ள ஆத்மநாத வனத்தில் சமுக்தியாம்பிகையம்மன், சரபேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னதிகள் தனி, தனியாக உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி சித்ரா பவுர்ணமியையொட்டி சமுக்தியாம்பிகையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பேராபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.