2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-17 22:21 GMT
செம்பட்டு:

அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
2 கிலோ தங்கம் பறிமுதல்
அப்போது விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ேசாதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி மற்றும் ஊழியர் ஒருவர் தங்கம் கடத்தி வந்ததாகவும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் விமான நிறுவன ஊழியரான சென்னை வளசரவாக்கத்ைத சேர்ந்த வினோத்குமார் மற்றும் பயணியான நாகப்பட்டினத்தை சேர்ந்த பகுருதீன் ஆகியோரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான சுமார் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து 2 பேரிடமும் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்