மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் பெருவிழா

மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் பெருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-17 22:29 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் எடத்தெரு மற்றும் கடை தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில்களின் திருத்தேர் பெருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. வருகிற 22-ந் தேதி அன்ன வாகனத்திலும், 23-ந் தேதி ரிஷப வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது. 24-ந் தேதி பூ பல்லக்கும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 25-ந் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடும், பொங்கல் வைத்து வழிபாடும், கோவிலுக்கு பக்தர்கள் அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தி வருவதலும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந் தேதி நடக்கிறது. முன்னதாக மண்டகப்படி சீர் எடுத்தல் நடக்கிறது. 27-ந் தேதி மஞ்சள் நீர் விடையாட்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்