போலீஸ் என கூறி வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பேர் கைது

போலீஸ் என கூறி வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-04-18 17:45 IST
பீகார் மாநிலம் காப்பான்பூரை சேர்ந்தவர் லுட்புர் ரகுமான் (வயது 22), இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வைப்பூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்து நடந்து வந்த அவரிடம் காக்கி பேண்ட் அணிந்து வந்த 2 பேர் வழிமறித்து நாங்கள் இருவரும் போலீஸ். நீ கஞ்சா வைத்திருக்கிறாயா ‌என்று கேட்டுள்ளனர். மொழி தெரியாத லுட்புர் ரகுமான் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து அவர்கள் இருவரும் லுட்புர் ரகுமானை பிடித்து மோட்டார் சைக்கிளில் அமர வைத்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் அழைத்து சென்று சோதனையிட்டு விட்டு அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.5 ஆயிரம் பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.

இது குறித்து அவர் தன்னுடைய நண்பரான வைப்பூர் கிராமத்தை சேர்ந்த சிவராமன் மற்றும் அங்குள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸ் என்று கூறியவர்களிடம் விசாரித்தனர். சந்தேகமடைந்த இவர்கள் ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி காரணித்தாங்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (32), வஞ்சுவாஞ்சேரி இந்திரா தெருவை சேர்ந்த சரவணன் (45) என்பதும் போலீஸ் என்று கூறி பணம் பறித்ததும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்