பொள்ளாச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது;

Update:2022-04-18 19:39 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி தொடங்கியது.

தேசிய செஸ் போட்டி

18 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

 இதில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி உள்பட 22 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 

பொதுபிரிவில் 142 பேரும், பெண்கள் பிரிவில் 95 பேரும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்துகின்றனர். 

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டிக்கான மொத்த பரிசு ரூ.9 லட்சம். போட்டி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதிகளாக கலந்துகொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

உலக அளவில் 4-வது இடம்

போட்டியை முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் ரமேஷ்  தொடங்கி வைத்து கூறியதாவது

விளையாட்டில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பங்களிப்பை வழங்க வேண்டும். 

வெற்றி, தோல்வியை நினைத்தால் நம்மால் விளையாட்டில் முழுமையாக ஈடுபட முடியாது. 

சிந்திக்கும் திறன் குறைந்து விடும். தமிழகத்தில் மகாலிங்கபுரத்தில் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெறுகிறது.  

தற்போது செஸ் போட்டியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களை மத்திய, மாநில அரசுகள் பரிசுகளை கொடுத்து ஊக்குவிக்கிறது. 

இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்