சுல்தான்பேட்டையில் பெய்த பலத்த மழை காரணமாக தோட்டக் கலைத் துறை அலுவலக நுழைவுவாயில் சுவர் இடித்து விழுந்தது. மேலும் கட்டிடம் பழுதானதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
சுல்தான்பேட்டையில் பெய்த பலத்த மழை காரணமாக தோட்டக் கலைத் துறை அலுவலக நுழைவுவாயில் சுவர் இடித்து விழுந்தது. மேலும் கட்டிடம் பழுதானதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் பெய்த பலத்த மழை காரணமாக தோட்டக் கலைத் துறை அலுவலக நுழைவுவாயில் சுவர் இடித்து விழுந்தது. மேலும் கட்டிடம் பழுதானதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தோட்டக்கலை அலுவலகம்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளா கத்தில் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர், அலுவலர், உதவி அலு வலர்கள் என மொத்தம் 6 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்துக்கு ஒன்றியத்தின் பல இடங்களில் இருந்து விவசாயிகள் வருகின்றனர்.
அவர்கள், அரசு மானியத்தில் வழங் கப்படும் இடுபொருட்கள், சொட்டுநீர் பாசன மானியம், விவசா யத்தில் நவீன தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்காக வருகின்றனர்.
கட்டிடம் பழுது
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த நிலையில் சுல்தான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
அதற்கு தாக்குபிடிக்காமல் முன்புற நுழைவு வாயில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.
மேலும் அந்த அலுவலக கட்டிடத்தின் உள்புறத்தில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு இருக்கிறது.
போதிய பராமரிப்புஇன்றி கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
எனவே சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை அலுவலக கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
அல்லது பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்றும் நிலை உருவா கும்.
மேலும் அங்கு வரும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
எனவே கட்டிட பராமரிப்பு பணியை விரைந்து தொடங்க சம்மந்தப்படட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.