கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் (மே) 3 நாட்கள் நடக்கிறது

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் (மே) 3 நாட்கள் நடக்கிறது;

Update:2022-04-18 19:51 IST

கிணத்துக்கடவு

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் (மே) 3 நாட்கள் நடக்கிறது.

சூலக்கல் மாரியம்மன்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் - விநாயகர் கோவில் உள்ளது. 

இங்கு கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெற வில்லை.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் (மே) 9-ந் தேதி காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்குகிறது. 

மே 10-ந் தேதி காலை 9 மணிக்கு வேல் புறப்பாடு மற்றும் பூச்சாட்டு விழா நடக்கிறது. 16-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது.

தேரோட்டம்

17-ந் தேதி இரவு 9 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலா, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

25 -ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 26, 27, 28-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

அன்னதானம்

29-ந் தேதி பகல் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது. 

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,   பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும்  அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்