தோட்ட உரிமையாளர் கைது

தோட்ட உரிமையாளர் கைது;

Update:2022-04-18 19:51 IST
தோட்ட உரிமையாளர் கைது
கோவை

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வரப்பாளையம் பகுதியில் தோட்டம் வைத்திருப்பவர் மனோகரன்.தோட்டத்து பயிர்களை யானை சேதப்படுத்தாமல் இருக்க இவர் தோட்டத்தை சுற்றி சூரிய மின் வேலி அமைத்திருந்தார். சம்பவத்தன்று இவர்  சூரிய மின் வேலியில்  சூரிய மின்  சக்தி இணைப்பை துண்டித்து விட்டு, மின்வாரிய  இணைப்பை இணைத்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் மின் வேலியை 15 வயது   மதிக்கத்தக்க  ஆண் காட்டுயானை தாண்டி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக  உயர் அழுத்த மின்சாரம் அந்த யானையின் உடலில் பாய்ந்தது. இதனால் அந்த யானை  சம்பவ இடத்தில் பலியானது. இது தொடர்பாக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் காட்டு யானை கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய தோட்ட உரிமையாள மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை வனத்துறையினர சிறப்பு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 தலைமறைவாக இருந்து வந்ததோட்ட உரிமையாளர் மனோகரன் நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் பன்னிமடை பஸ் நிறுத்தம் அருகில் வைத்து வனத்துறை தனிப்படை குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்