பொள்ளாச்சி நேதாஜி ரோட்டின் இருபுறமும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

பொள்ளாச்சி நேதாஜி ரோட்டின் இருபுறமும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது;

Update:2022-04-18 22:59 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நேதாஜி ரோட்டின் இருபுறமும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

விதிமீறும் வாகனங்கள்

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் நேதாஜி ரோடு செல்கிறது. 

வடுகபாளையம் பிரிவில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்துக் காக திறக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேதாஜி ரோடு வழியாக பாலக்காடு ரோட்டை அடைகின்றன.

 இதன் காரணமாக தினமும் ஏராளமான வாகனங்கள் அந்த சாலையில் சென்று வருகின்றன. 

இந்த நிலையில் அங்குள்ள ஒர்க் ஷாப்பிற்கு வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவ ரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இருவழிப்பாதையில் ஆட்டோ போன்ற சிறிய வாகனங்கள் செல்வதற்கு மட்டும் தான் வழி உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

தாறுமாறாக நிறுத்தப்படுகிறது

வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெற்று வந்ததால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஜமீன் ஊத்துக்குளி வழியாக சுற்றி வந்து பாலக்காடு ரோட்டை அடைந்தன. 

தற்போது பாலம் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து வாகனங்களும் நேதாஜி ரோடு வழியாக பாலக்காடு ரோட்டிற்கு எளிதில் வந்து விடுகின்றன. 

 இந்த நிலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா னம் செல்லும் சாலையின் இருபுறம் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

 இதனால் கிரேன், லாரி போன்ற கனரக வாகனங்களை நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. 

இதன் காரணாக வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

விபத்து வாய்ப்பு

புதிதாக போடப்பட்ட இருவழிச்சாலை பயன் இல்லாமல் உள்ளது. மேலும் அங்கு விபத்துக்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இது குறித்து பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

எனவே நேதாஜி ரோட்டின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்