தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update:2022-04-19 18:47 IST

கோவை

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்ட புதிய ஒப்பந்தத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து சிகிச்சைகளுக்கும் உண்மையான காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். 

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம் போல அரசு மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும், 

சித்தா, ஆயுர்வேதம், யுனானி முறை சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். 

மேலும் செய்திகள்