கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக கோவை அரசு ஆஸ்பத்திரி மாறி உள்ளது
கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக கோவை அரசு ஆஸ்பத்திரி மாறி உள்ளது;
கோவை
கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக கோவை அரசு ஆஸ்பத்திரி மாறி உள்ளது.
கொரோனா தொற்று
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வந்தது.
இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழப்பும் ஏற்பட்டதால் மக்கள் தொற்று அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனாவின் கோர தாண்டவம் தீவிரமாக இருந்தது. அப்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தடுப்பூசி
ஆனால் அது பற்றாக்குறையாக இருந்ததால் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதைய டுத்து தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதன் மூலம் கோவையில் 85 சதவீத மக்களுக்கு கொரோனா எதிர்பாற்றல் அதிகரித்தது.
இதன் காரணமாக கடந்த 2 மாதங் களாக கோவை மாவட்டத் தில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்று முதல் 5 வரை மட்டுமே இருந்து வருகிறது.
நோயாளிகள் இல்லை
கொரோனா உச்சத்தில் இருந்த போது கோவை அரசு ஆஸ் பத்திரியின் குறிப்பிட்ட பகுதியை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கை இலக்கத்தில் இருந்து வருகிறது.
எனவே அங்கு கடந்த சில வாரங்களாக 10-க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உள்ளது.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறுகையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. அவர்கள் அனைவரும் குணம டைந்து வீடு திரும்பி விட்டனர்.
ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வார்டை மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்து உள்ளோம். அங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா குறைந்துவிட்டது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முகக்கவசம் அணிந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.