கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குற்றவாளிகளின் கைரேகை தேசிய கைரேகை பிரிவில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குற்றவாளிகளின் கைரேகை தேசிய கைரேகை பிரிவில் பதிவேற்றம் செய்யப்பட்டது.;

Update:2022-04-19 19:41 IST

கோவை

கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குற்றவாளிகளின் கைரேகை தேசிய கைரேகை பிரிவில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

துப்புத்துலக்குவதில்  பங்கு 

தமிழக காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றங்கள் நடந்தால் துப்புத்துலக்குவதில் கைரேகை பிரிவின் பங்கு முக்கியமானது. 

எனவே வழக்கு தொடர்பாக சிக்கும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து ஆவணப்படுத்திக் கொள்வார்கள்.

இதையடுத்து குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடத்தில் எடுக்கப் படும் கைேரகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் பொருத்தி பார்த்து போலீசார் துப்பறிவார்கள். 

முன்பு ஒரு குற்றவாளியின் கைரேகை மாநில அளவில் மட்டும் பொருத்தி பார்க்கப்பட்டு வந்தது.

தேசிய கைரேகை பிரிவு

இதனால் வெளிமாநிலங்கள் இருந்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. 

எனவே தேசிய அளவில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் கைரேகைகளை பகிர்ந்து கொண்டு கண்டறிய வசதியாக தேசிய கைரேகை பிரிவு உள்ளது.

அதனுடன் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகள் ஆன்லைன் மூலம் கோவை மாவட்ட காவல்துறை கைரேகை பிரிவினர் பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது

கண்டுபிடிக்கலாம்

கோவை மாவட்டத்தில் ஒரு குற்றத்தில் ஈடுபட்டு பிடிபடும் குற்றவாளியின் கைரேகையை ஆன்லைனில் பதிவேற்றி தேசிய கைரேகை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 


இதன் மூலம் மற்ற மாநிலங்களில் அந்த ஆசாமி குற்றங்களில் ஈடுபட்டு இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து விடலாம்.

கோவை வடவள்ளி பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய ஆசாமி ஒருவரின் கைரேகை அந்த வீட்டில் பதிவாகி இருந்தது. 

அதை ஒப்பிட்டு பார்த்தபோது அந்த ஆசாமி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன், பல குற்றங்களில் ஈடுபட்டவன் என்பது தெரிய வந்தது. அவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்