முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் திராவகம் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் திராவகம் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்;
கோவை
முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில் திராவகம் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
திராவகம் வீச்சு
கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்கள் சம்பத் (70), அவருடைய மகன் நீலமேகம் (25) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சம்பத் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து வீரமணி மீது வீசினார்.
பதிலுக்கு வீரமணியும் சம்பத் மீது ஆசிட் வீசி உள்ளார்.
போலீசில் புகார்
இதில் சம்பத்துக்கு வாய் மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தடுக்க முயன்ற வீரமணியின் தாயார் பாக் கியத்தை சம்பத், அவருடைய மகன் நீலமேகம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
இந்த மோதலில் இருதரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்ட னர். திராவகம் வீச்சில் காயமடைந்த சம்பத் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து இருதரப்பிலும் தனித்தனியாக செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
2 பேர் கைது
அதன் பேரில் தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சம்பத், அவருடைய மகன் நீலமேகம் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திராவகம் வீசியது தொடர்பாக நீலமேகம், வீரமணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.