பொள்ளாச்சியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் டிரைவர் கைது

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.;

Update:2022-04-19 22:05 IST
பொள்ளாச்சி

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

14 வயது சிறுமி மாயம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிறுமியை கடந்த 12-ந்தேதி முதல் திடீரென்று காணாமல் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் தேடி பார்த்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி நகர போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் மாயம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அதில் அவர் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி அருகே உள்ள மயிலாடுதுறையை சேர்ந்த டிரைவரான தினகரன் (20) என்பது தெரியவந்தது.

டிரைவர் கைது

சிறுமியிடன் முகநூல் மூலம் தினகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலித்த வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி தினகரன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கடந்த 13-ந்தேதி சிறுமியை அவர் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தினகரனை கைது செய்தனர். மேலும் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்